பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் : குறள் - 972

History

BADLAPUR TAMILS WELFARE SOCIETY Registered under Society Act Regd. No. MAH/1847/16/Thane dated 23.11.2016 and Bombay Public Trust Act 1950 Regd. No. F/34043/Thane dated 22.08.2017 with the Government of Maharashtra.
பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் மஹாராஷ்டிரா Society Act Regd. No. MAH/1847/16/Thane dated 23.11.2016 சங்கங்களின் விதிப்படியும் Bombay Public Trust Act 1950 Regd. No. F/34043/Thane dated 22.08.2017 அறக்கட்டளை விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்லாபூரில் கிழக்கிலும் மேற்கிலும் வாழும் தமிழர்கள் பரவலாக வசித்து வருகிறோம். அவர்களிடையே ஒற்றுமை வளர்க்கவும், கலை வளர்ச்சிப் பணிகளில் ஆர்வம் காட்டவும் குழந்தைகளின் கல்விக்கு உதவிடும் வகையிலும் முடிந்தவரை ஒருவர்க்கொருவர் தொடர்புகள் ஏற்படவும், மஹாராஷ்டிரா மண்ணில் வாழும் தமிழர்கள் இம் மண்ணின் மக்களோடு இணைந்து தமிழர் நலம் பேணுதல், முன்னேற்றம் காணுதல் செம்மொழியாம் தமிழ் மொழி வளர முயற்சி மேற்கொள்ளல் என்ற நோக்கோடு சங்கப் பணிகள் அமைய பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் துவங்கப்பட்டது இவை அனைத்தும் நிர்வாகிகளோடு உறுப்பினர்கள் தமிழர்கள் அனைவரும் நல் எண்ணம் கொண்டு ஆலோசனைகள் வழங்கி ஆதரவு கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும்.
சாதி, மத அரசியல் ஆகியவற்றைக் கடந்து தமிழர் நலன், முன்னேற்றப் பணிகளில் மனித நேயத்துடன் செயல்பட, தமிழ் மொழி காத்திட பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் உறுதி கொண்டுள்ளது.

தமிழால் இணைவோம்! தரணியை வெல்வோம்!!
அன்பு நெறி பெருக அனைவரும் ஆதரவு தாரீர்!!!

தமிழால் இணைவோம்! தரணியை வெல்வோம்!!

Get in touch with us