பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் : குறள் - 972

Activities

கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி குழந்தைகளின், பெண்களின், இளைஞர்களின் கல்விக்கு முதலிடம் அளிக்க சங்கம் முழு முயற்சி மேற்கொள்ளும். தமிழ் மக்களிடையே விழிப்புணர்வு கொண்டு வர கருத்தரங்குகள், மாநாடுகள், மருத்துவ முகாம், கணினிப் பயிற்சி, கலாசார நிகழ்வுகள் நடத்த சங்கம் முயலும்.

  • இரத்த தான முகாம்
  • இலவச கண் மருத்துவ முகாம்
  • சுகாதார விழிப்புணர்வு மையங்கள் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு சேவை செய்தல்.

பெண்கள் கல்வி நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை மேற்கொள்ள முடியும். எனவே குழந்தைகள் மற்றும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள், விருதுகள் வழங்கியும், பெண்கள் நல முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபடும்.

இயற்கை வளங்களை பாதுகாக்க பெரிதும் பாடுபடும். சுற்றுப்புற சூழல் பசுமை நிறைந்து காண, மரங்களின், மூலிகைகளின் பலன் பற்றியும் விளக்கி சுற்றுப்புற சூழல் காக்க பாடுபடும்.

தமிழர்கள் ஆரம்ப காலம் முதல் கூத்து, நாடகம், ஒயிலாட்டம், கும்மி, மேளம், சிலம்பாட்டம், போன்ற கிராமிய கலைகளில் சிறந்து விளங்கியுள்ளனர். பரத நாட்டியம் போன்ற கலைகளில் ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர். தமிழர்களின் கலாச்சாரமும் நிலைத்து நிற்க சங்கம் தனது பணியைத் தொடரும்.

தமிழால் இணைவோம்! தரணியை வெல்வோம்!!

Get in touch with us