பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் : குறள் - 972

Achievements

முப்பெரும் விழா

பத்லாபூர் தமிழர் நலச் சங்கம்- துவக்க விழா, தமிழர் திருநாள் பொங்கல் விழா, குடியரசு தின விழா என முப்பெரும் விழா 26.01.2017 வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் பத்லாபூர் கிழக்கு, மோகன் பாம்ஸ், பென்டுல்கர் மங்கள் காரியாலயா அரங்கில் நடைபெற்றது. தலைவர் திரு ஜே. எட்வர்ட் அவர்கள் தலைமையில், மும்பை தி.மு.க. பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி அவர்கள் தொடக்கவுரையாற்றினார். சங்கப் பெயர் பலகை CEO & Director, CETTINAD MARINE திரு எஸ். பழனியப்பன் அவர்கள் திறந்து வைத்தார். இணைச்செயலாளர் திருமதி சரோஜா உதய்குமார் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

Chief Guest Shri Rajan Ghorpade, Ex. President KBMC, & Councillor, Shri N. Guruprasad, Director, Research Universal Business School, Karjat, Shri Bala Murugan, Manager, Federal Bank, Badlapur.

திரு ச. அருணாச்சலம் துணைத் தலைவர், திரு கே.பி. ஜானகி ராமன் ஆலோசகர் திரு எம். சுப்ரமணியம், ஆலோசகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ் எழுத்தாளர் மன்றம் மராத்திய மாநிலம், தலைவர், பேராசிரியர் சமீரா மீரான் அவர்கள் கலைக் குழுவில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி, சால்வைகள் அணிவித்து சிறப்புறையாற்றினார். செயலாளர் திரு பா. கனகராஜ் நன்றி கூறினார்.

திரு ஆ. சம்பத், தலைவர், திருவள்ளுவர் நற்பணி மன்றம், உல்லாஸ் நகர், திரு வே. சதானந்தன், செயலாளர், தமிழ் நற்பணி மன்றம், கல்யாண், திரு முத்தமிழ் தண்டபாணி, செயலாளர், முத்தமிழ் மன்றம், அம்பர்நாத், திரு ஜெயா ஆசிர், முதன்மை ஆசிரியர், வணக்கம் மும்பை, மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.

திருமதி மீனாட்சி வெங்கட், திருமதி லலிதா கண்ணன் ஆகியோர் கீர்த்தனா, மீனாட்சி மகாதேவன், அசின் சத்தீஷ், வேதாந்த் ஜனார்தன், சாய் ரித்தீஷ் (எ) மணிகண்டன் & ராஜ் உல்லாஸ் நகர் கலைக் குழுவினரைக் கொண்டும் பரத நாட்டியம், கிராமிய நடனம், பாட்டு, மிமிகிரி போன்ற சிறப்பான கலை நிகழ்ச்சி நடத்தி அரங்கில் அனைவரின் பாராட்டு பெற்றனர்.

பத்லாபூர் தமிழர் நலச் சங்கம், எம்.ஜி.எம் நவி பாம்பே மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்த்த, தமிழர்கள் மற்றும் பத்லாபூரில் வாழும் அனைவரும் பயன்பெறத்தக்க வகையில் பத்லாபூர் தமிழர் நலச் சங்கம், எம்.ஜி.எம். நியூ பாம்பே மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் 14.04.2017 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பத்லாபூர் கிழக்கு துவாரகா பாய் கணேஷ் நாயக் வித்யாலயாவில் (பால் விகாஸ்) பள்ளியில் சங்கத் தலைவர் கருவூர் இரா. பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முர்பாத் சட்டமன்ற உறுப்பினர் திரு கிசன் கத்தோரே, திரு இராஜேந்திர கோர்படே பத்லாபூர் நகர்மன்ற உறுப்பினர் ஆகியோர் மருத்துவ முகாமை தொடக்கி வைத்தனர். துணைத்தலைவர் திரு எஸ். பழனியப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். டாக்டர் ஜா, திருமதி ராஜேஷ்வரி ஞானேஷ்வர் கோர்படே, மற்றும் பலர் உரையாற்றினர். செயலாளர் பா. கனகராஜ் நன்றி கூறினார்.

Dr. VIDHI- Physician, Dr. ALIYA- Physician, Dr. RITVIK- Physician, Dr. DEVESH- Physician, Dr. RISHIKESH- Orthopaedic, Dr. RASHMI- Gynecology Dr. BRIJESH- Ophthalmologist, Dr. SUMIT- ENT, Dr. POORNIMA - Skin, Dr. RESHMA - ECG Technician, Mr. RAKESH- RBS Technician, Mr. VIJAY – CAMP COORDINATOR & Dr. Mrs. ASHWINI KANHERE- Hearing Test

15 பேர் அடங்கிய எம்.ஜி.எம் மருத்துவர்குழு சிறப்பான மருத்துவ பரிசோதனை நடத்தி திரு இராஜேந்திர கோர்படே அவர்கள் அளித்த இலவச மருந்துகளும் வழங்கினர். 150க்கும் மேற்பட்டோர் பரிசோதனைகள் மேற்கொண்டு பயனடைந்தனர்.

கீழ்க்காணும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

RBS Check up, BP Check up, Eye Check up, Urologist Consultation, Orthopedic, Gynec, ENT, Physician & Skin Problem etc. எனப்படும்

சீரற்ற இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம், கண் சோதனை, எலும்பு தாது அடர்த்தி, சிறு நீரக பரிசோதனை, எலும்பியல் சோதனை, பெண்ணோயியல், காது, மூக்கு, தொண்டை, தோல் நோய் ஆகிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இணைச்செயலாளர் திரு ஜே. எபினேசர் அவரது துணைவியார் திருமதி அனிதா எபினேசர் ஆகியோர் நிர்வாகிகளுடன் பத்லாபூர் தமிழர் நலச் சங்கம், எம்.ஜி.எம் நவி பாம்பே மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்த முயற்சிகள் மேற்கொண்டமைக்கு சங்கம் நன்றி பாராட்டுகிறது.

பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் சார்பில் தமிழ் வகுப்பு

பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் சார்பில் தமிழ் வகுப்பு 18.06.2017 ஞாயிறு மாலை 5 மணி முதல் டாக்டர் B. வெங்கடரமணி அவர்கள் இல்லத்தில் ஆரம்பிக்கபட்டது. ஞாயிறு தோறும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது. தமிழ் வகுப்பில் ஆர்வமுடன் இதுவரை கீழ்க்காணும் குழந்தைகள் சேர்ந்தனர்.

கீர்த்தனா சபரிநாதன், கிரிஷான் சபரிநாதன், ஜெனோபி அகஸ்டின், ஜேப்ரினா அகஸ்டின், சல்மா ஷேக், நோர்பினா ஷேக், சாரா ஜோஸப், ஜபி ஜோஸப் ஆகிய 7 பேர் தமிழ் வகுப்பு சென்றனர். ஆனால் இன்றைய நிலையில் கீர்த்தனா சபரிநாதன், கிரிஷான் சபரிநாதன், ஆதித்யா மாயகுமார் வினோத் R., அமுதபிரியா R ஆகிய 5 பேர் தற்போது தமிழ் படித்து வருகிறார்கள் இதுவரை 20 க்கு மேல் தமிழ் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்வமுடன் இணைந்துள்ள குழந்தைகளுக்கு பாராட்டுதலும், கற்றுக் கொடுக்கும் பரந்த உள்ளத்துடன் முன் வந்த டாக்டர் வெங்கடரமணி அவர்களுக்கு நன்றியும் தமிழர் நலச் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். .

தமிழ் வகுப்புகள் தொடர்ந்து கிழக்கு, மேற்கு பகுதியினர் அனைத்து குழந்தைகளும் பங்கு பெறும் வகையில் குல்காவ்-பத்லாபூர் நகர்பரிசத் மராத்தி பள்ளி எண். 1, காந்தி சௌக், பத்லாபூர் கிழக்கில் நடத்த திருமதி ராஜேஷ்வரி ஞானேஷ்வர் கோர்படே கவுன்சிலர் அவரது உதவியாளர் திரு முரளி, PA மூலம் சங்கம் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மாத வாடகையாக ரூபாய் 500 என்ற கணக்கில் மொத்தம் ரூபாய். 5500 மேலும் டெபாசிட் தொகையாக ரூபாய் 1000/- மொத்தம் ரூபாய் 6500/- செலுத்தி 20.11.2017 முதல் 19.11.2018 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை தமிழ் வகுப்புகள் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. தொடர் முயற்சிகள் மேற்கொண்டு அனுமதி பெற்றுத் தந்த திருமதி ராஜேஷ்வரி ஞானேஷ்வர் கோர்படே கவுன்சிலர் அவரது உதவியாளர் திரு முரளி, PA ஆகியோருக்கும், குல்காவ்-பத்லாபூர் நகர்பரிசத், மராத்தி பள்ளி தலைமை ஆசிரியருக்கும் உங்கள் அனைவர் மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்லாபூர் அல்லது கர்ஜத் இரயில் நிலையத்தில் நிறுத்தக் கோரிக்கை.

பத்லாபூர் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மற்றும் சாலுக்யா எக்ஸ்பிரஸ் போன்ற தமிழத்திலிருந்து வரும் இரயில் வண்டிகள் கல்யாண் இரயில் நிலையத்தில் நிறுத்துவதால் திரும்பி பத்லாபூர் மாலை வேளையில் புறநகர் வண்டிகள் பிடித்து வருவது மிகவும் சிரமமான ஒன்று என்பதால் பத்லாபூர் அல்லது கர்ஜத் இரயில் நிலையத்தில் நிறுத்தினால் வசதியாக இருக்கும் என்ற பலரது வேண்டுகோளுக்கு இணங்க

Trains 16340/16352 Nagacoil-Mumbai Exp. and 11022 Chalukya Exp. at Badlapur/Karjat Junction மற்றும் சென்னையிலிருந்து வரும் தென்னக இரயில்கள் பத்லாபூர் அல்லது கர்ஜத் இரயில் நிலையத்தில் நிறுத்த மத்திய இரயில்வேக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் நகல் மும்பை தமிழர் இரயில் பயணிகள் சங்க பொதுச் செயலாளர் திரு அப்பாதுரையார் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கோரிக்கை மனு மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு ப்யூஸ் கோயல் அவர்களுக்கும் இ மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

தானே பாராளுமன்ற உறுப்பினர் திரு ராஜன் விச்சாரே அவர்களிடம் கோரிக்கை மனு

16340 நாகர்கோயில் மும்பை எக்ஸ்பிரஸ், 11022 திருநெல்வேலி தாதர் சாலுக்யா எக்ஸ்பிரஸ் ஆகியவை கர்ஜத் இரயில் நிலையத்திலும், 11021 தாதர் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், 11027 மும்பை சென்னை மெயில் 11005 தாதர் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ஆகியவை தானே இரயில் நிலையத்திலும் நிறுத்தக் கோரிக்கை மனு தானே பாராளுமன்ற உறுப்பினர் திரு ராஜன் விச்சாரே அவர்களிடம் மும்பை தமிழின இரயில் பயணிகள் நலச் சங்கம் பொதுச் செயலாளர் திரு டி. அப்பாதுரை, பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் தலைவர் கருவூர் இரா. பழனிச்சாமி, தானே தமிழ் சங்கம் நிர்வாகி திரு கே.ஏ. ஜாகிர் உசேன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

குறிப்பாக 16340 நாகர்கோயில் மும்பை எக்ஸ்பிரஸ் கல்யாண் இரயில் நிலையத்தில் இரவு 7.30 மணியளவில் வந்து சேர்வதால் அம்பர்நாத், பத்லாபூர், மற்றும் கர்ஜத் நோக்கி செல்ல வேண்டிய பயணிகள் புறநகர் வண்டி ஏறிச் செல்வதில் பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர் என்பதை விளக்கினர்.. கவனமுடன் கேட்ட திரு ராஜன் விச்சாரே மத்திய இரயில்வேக்கு பரிந்துரைத்து ஆவன செய்வதாக உறுதி கூறினார்.

பத்லாபூர் தமிழர் நலச் சங்கப் பணிமனை (OFFICE)

பத்லாபூர் தமிழர் நலச் சங்கத்திற்கென பணிமனை இருந்தால் மேலும் சங்க வளர்ச்சிப் பணிகளைச் செய்ய ஏதுவாகவும், உறுப்பினர்கள் நம்பிக்கையுடன் சேர வாய்ப்பாகவும் இருக்கும் என்பதால் சங்கப் பணிமனைக்கு இடம் கேட்டு இலவசமாகவோ அல்லது அரசின் குறைந்த விலையிலோ கிடைக்க வழிவகை செய்ய சட்டமன்ற உறுப்பினர் திரு கிசன் கத்தோரே, திரு இராஜேந்திர கோர்படே பத்லாபூர் நகர்மன்ற உறுப்பினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சங்கம் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதுவரை 35 ஆயுள் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கப்பட்டடுள்ளது. மேலும் சிலருக்கு விரைவில் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்

பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் இரண்டாம் ஆண்டு விழா 9.06.2018

பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் இரண்டாம் ஆண்டுவிழா 9.06.2018 சனிக்கிழமை மாலை பென்டுல்கர் மங்கள் காரியாலயா அரங்கில் நடைபெற்றது.

தலைவர் கருவூர் இரா. பழனிச்சாமி தலைமையில் நடந்த விழாவில் முர்பாத் சட்டமன்ற உறுப்பினர் கிசன் கத்தோரே, பத்லாபூர் கேபிஎம்சி முன்னாள் தலைவர் கவுன்சிலர் ராஜேந்திர கோர்படே, கவுன்சிலர் திருமதி ராஜஸ்வரி ஞானேஷ்வர் கோர்படே, அபூர்வா கெமிகல் உரிமையாளர் திருமதி சண்முக சுந்தரி கண்ணன், தானே பெடரல் வங்கி துணைத் தலைவர் பாலமுருகன், தமிழ் எழுத்தாளர் மன்ற பொதுச்செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன், மும்பை மாநில தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார், புலவர் பாலையா, திரு ராமகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மகாராஷ்டிரா தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவர் பேராசிரியர் சமீரா மீரான் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமிகளுக்கு 30 பேருக்கு மேல் பரிசுக் கோப்பைகளும், பாராட்டுச் சான்றிதழும், 65 பெருக்கு மேல் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச குறிப்பேடுகள், நோட்டுகள், பேனா, பென்சில் , ரப்பர் ஆகியவை வழங்கப்பட்டது.

இணைச் செயலாளர் ஜெ. எபினேசர் வரவேற்புரையாற்ற, இணைச் செயலாளர் சரோஜா உதய்குமார் தொகுத்து வழங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர்கள் எஸ். அருணாச்சலம், எஸ். பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஞானபிரகாசம் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் திருமதி மீனாட்சி வெங்கட், அ. அகஸ்டின், டி.செங்குட்டுவன், டி. வெங்கடேசன், கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் சார்பில் புகழஞ்சலி

பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும்,முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கும் 2.09.2018 ஞாயிறு மாலை பத்லாபூர் கிழக்கு மராத்தி பள்ளி வளாகத்தில் தலைவர் கருவூர் இரா.பழனிச்சாமி தலைமையில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது துணைத்

தலைவர் எஸ். பழனியப்பன் முன்னிலையில் இணைச்செயலாளர் ஜெ. எபினேசர் வரவேற்புரையாற்ற, செயலாளர் ப. கனகராஜ், பொருளாளர் ஞானபிரகாசம், திருமதி மீனாட்சி வெங்கட், அ. அகஸ்டின், டி.செங்குட்டுவன், எம். சுப்ரமணி, கோவிந்தராஜ், பி. முத்துராமன் மற்றும் பலர் மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.

இரு மாபெரும் தலைவர்கள் ஆற்றிய பணிகள், அவர்களின் தனிச் சிறப்பு, அனைவரையும் அரவணைத்து செல்லும் பாங்கு பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். அவர்கள் வழியில் சமூக நீதி, சமத்துவம், மொழியுணர்வு, நாட்டுப்பற்று ஆகியவை பின் தொடர்ந்து நமது பணிகளை ஆற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் நாடு, தேசிய அளவில் அவர் ஆற்றிய பணிகள், மொழிக்கும், அதேபோல் சமூக நீதிக்காக பாடுபட்டதை கருத்தில் கொண்டு கலைஞர் அவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

பத்லாப்பூர் தமிழர் நலச் சங்கம் சார்பில் இலவச சுகாதார முகாம்

பத்லாப்பூர் தமிழர் நலச் சங்கம் மற்றும் டொட்டு சீனா செட்டி நினைவு சென்ட்ரல் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச சுகாதார முகாம் (11.11.2018) ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பத்லாபூர் கிழக்கு கல்யாண் – கர்ஜத் சாலையில் உள்ள பொத்தார் எவர் கிரீன்ஸ் சென்ட்ரல் மருத்துவமனையில் நடைபெற்றது.

பத்லாப்பூர் தமிழர் நலச் சங்கத்தின் தலைவர் கருவூர் இரா. பழனிச்சாமி தலைமை தாங்க, இலவச முகாமை சிவசேனாவை சேர்ந்தபஞ்சாயத் சமிதி உறுப்பினர் பலராம் ஜகன் காம்ப்ரி தொடங்கி வைத்தார்.. மேலும் இந்நிகழ்வுக்கு சென்ட்ரல் மருத்துவமனை மருத்துவர் ரத்னாகர் செட்டி, இயக்குனர் சுஜாதா செட்டி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நகர்மன்றஉறுப்பினர் ராஜேஷ்வரி தியானேஷ்வர் கோர்படே, அபூர்வ கெமிக்கல்ஸ் உரிமையாளர் சண்முகசுந்தரி கண்ணன், இயக்குநர் திரு சக்தி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

புற்றுநோய் தடுப்பு, நீரிழவு உயர் இரத்த அழுத்தம், பெண்ணோயியல் ((மகளிர்), எலும்பு கனிம அடர்த்தி, காது பரிசோதனை, கணினிமயகண் பரிசோதனை மற்றும் இலவச கண்ணாடி வழங்கப்பட்டது.15 பேர் கொண்ட மருத்துவர் குழு சிறப்பான பரிசோதனைகள் செய்துஇலவசமருந்து அளித்து வழிகாட்டினர். தமிழர்கள் மட்டுமல்லாது மராத்திய மக்களும் சுமார் 200க்கு மேல் பயனடைந்தனர். குறிப்பாக பெண்களுக்கு (Cancer Detection) புற்று நோய் தடுக்கும் விதமாக Mammography – Papsmear sample 37 பேருக்கு எடுக்கப்பட்டுள்ளது. கணினி மூலம் கண் பரிசோதனை செய்து 140 பேருக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது,

பத்லாப்பூர் தமிழர் நலச் சங்கத்தலைவர் கருவூர் இரா. பழனிச்சாமி,செயலாளர் ப. கனகராஜ், இணைச்செயலாளர் சரோஜா உதய்குமார்இணைச் செயலாளர் ஜே. எபினேசர், பொருளாளர் ஞானபிரகாஷ், நிர்வாக குழு உறுப்பினர்கள் அ.அகஸ்டின் மீனாட்சி வெங்கட், டி.வெங்கடேஷ்,மற்றும் உறுப்பினர்கள். மருத்துவர் ஹர்சதா செட்டி, சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தமிழால் இணைவோம்! தரணியை வெல்வோம்!!

Get in touch with us